அரசு பெண்கள் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

அரசு பெண்கள் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு  கட்டமைப்பு
X

குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது.

குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியை சிவகாமி தலைமையில் பெற்றோர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவிற்காக இதில் 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தலைவராக வசந்தகுமாரி, துணை தலைவராக சௌடேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி, கல்வியாளராக எலிசபெத், ஆசிரியர் பிரதிநிதியாக கலைவாணி, மற்றும் தலைமை ஆசிரியை சிவகாமி ஆகிய ஐவர் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!