குமாரபாளையம் அருகே செங்கல் சூளை அமைக்க குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு ஆசிரியர் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் செங்கல் சூளை.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு ஆசிரியர் காலனி வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சங்கச் செயலர் குமார் கூறுகையில், நாங்கள் குடியிருக்கும் பகுதி அருகே செங்கல் சூளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இது பற்றி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அலுவலர் செல்வகுமாரிடம் புகார் கொடுத்ததின் பேரில், அவர் நேரில் வந்து அவர்களிடம், இந்த இடத்தில் செங்கல் சூளை அமைக்கக்கூடாது என எச்சரித்து சென்றார்.
அதையும் மீறி மீண்டும் செங்கல் சூளை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஒ., ஆர்.டி.ஒ., தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு குடியிருப்பு வாசிகள் புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
இப்பகுதி பொதுமக்கள், பெரியவர்கள், குழந்தைகள் சுகாதாரம் பாதிக்கும் என்பதால், இங்கு செங்கல் சூளை அமைக்க கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தலைவர் சரவணன், பொருளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu