கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்பு

கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்பு
X

படவிளக்கம் :

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்பு!

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தை பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம், 82. இவருடைய மனைவி லட்சுமி, 75. இந்த தம்பதியர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த நிலையில், சுமார் 70 அடி கிணற்றில் 30 அடி ஆழத்தில் வீட்டை ஒட்டி மூடப்படாத கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் முதியவர் ஆறுமுகம் காலை வீட்டில் இல்லாததை கண்ட மனைவி லட்சுமி அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார் .

இதனை அடுத்து அவரது வீட்டை ஒட்டி உள்ள கிணற்றில் பார்த்த பொழுது, அதில் முதியவர் ஆறுமுகம் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்த முதியவர் ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அவர் இரவு நேரத்தில் கிணற்றில் தவறி விழுந்தாரா ?அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story