இடைப்பாடி சாலை அபாய பள்ளம்! சீரமைக்க கோரிக்கை!

இடைப்பாடி சாலை அபாய பள்ளம்! சீரமைக்க கோரிக்கை!
X
குமாரபாளையத்தில் இடைப்பாடி சாலை அபாய பள்ளம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபாய பள்ளம் சீரமைக்க கோரிக்கை - குமாரபாளையத்தில் இடைப்பாடி சாலை அபாய பள்ளம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை உழவர் சந்தை அருகே பெரிய பள்ளம் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால், ஆழம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமல், டூவீலர் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். மிக முக்கியமான சாலை என்பதால், இந்த சாலை பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture