குமாரபாளையத்தில் வடிகால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் வடிகால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
X

தம்மண்ணன் சாலை நுழைவுப்பகுதியில் வடிகால் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் வடிகால் பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம்- சேலம் சாலை சவுண்டம்மன் கோயில் அருகே வடிகால் பாலம் கட்டும் பணிக்கு தம்மண்ணன் சாலை நுழைவுப்பகுதியில் பொக்லின் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

பள்ளிபாளையம் சாலை, சேலம் கோவை புறவழிச்சாலை ஆகியவற்றை இணைக்கும் சாலை என்பதாலும், அதிக குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதி என்பதாலும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் சாலை என்பதாலும், இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

சாலையின் பாதி அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டதால் லாரி, டெம்போ ஆகிய கனரக வாகனங்கள் செல்ல முடியாமலும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் ஏற்றி செல்லவும், நூல் பேல்கள் கொண்டு வரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையின் முக்கியத்துவத்தை அறிந்து வடிகால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!