கோவக்சின் தடுப்பூசி முகாம் அமைக்க கோரிக்கை

கோவக்சின் தடுப்பூசி முகாம் அமைக்க கோரிக்கை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் கோவக்சின் தடுப்பூசி முகாம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி பல மையங்களில் தினமும் போடப்பட்டு வருகிறது. ஆனால் கோவக்சின் தடுப்பூசி முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் தவணை போட உரிய நாள் வந்தும், முகாம் அமைக்கப்படாததால், தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லவும், வெளி மாநிலங்கள் செல்லவும், வெளிநாடுகளுக்கு செல்லவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், தற்போது ரேசன் கடைகளுக்கு செல்லவும் கொரோனா தடுப்பூசி சான்று கேட்டு வருகிறார்கள். நீண்ட நாட்களாக கோவக்சின் தடுப்பூசி முகாம் அமைக்கப்படாததால் பலரும் பல வகைகளில் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இனி வரும் நாட்களில் முகாம்களில் கோவக்சின் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்தால், அந்தந்த பகுதி பொதுமக்கள், அந்தந்த பகுதியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!