பள்ளிபாளையம் : அம்மா கிளினிக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை!

பள்ளிபாளையம் : அம்மா கிளினிக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை!
X

செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் அம்மா கிளினிக்.

மூடப்பட்ட அம்மா கிளினிக் சுகாதார நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர புதுப்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் பேரூராட்சி புதுப்பாளையம் பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக்கை மீண்டும் திறந்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது புதுப்பாளையம். இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் தமிழக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் தற்போதைய குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி தலைமையில் புதுப்பாளையம் பகுதியில் புதிதாக அம்மா கிளினிக் பொது சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பயன்பாட்டில் இயங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக அம்மா கிளினிக் சுகாதார நிலையம் முழுமையாக செயல்படாமல் முடங்கியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவசர தேவைக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் பொழுது, கடந்த சில மாதங்களாக குறிப்பாக கொரோனா தொற்று இரண்டாம் அலை ஆரம்பமாகும் போது இங்கு பணியாற்றிய. மருத்துவர்கள் செவிலியர்கள் வேறு இடத்திற்கு பணியாற்ற அழைக்கபட்டதாக கூறப்படுகிறது. புதுப்பாளையம் பகுதியொட்டிய கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சுகாதார நிலையத்தில் தொடர் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொக்கராயன்பேட்டை அல்லது பள்ளிபாளையம் ஆவாரங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் கர்ப்பிணி பெண்கள்,பொது மருத்துவம் பார்ப்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு இந்த அம்மா கிளினிக் பொது சுகாதார நிலையத்தை மீண்டும் பயன்பாட்டு கொண்டு வர வேண்டும். இங்கு நிரந்தரமான மருத்துவர்களை நியமித்து கொரோனா காலம் என்பதால் சளி,தொற்று பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசிகள் இந்த சுகாதார நிலையத்திலயே போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்