குமாரபாளையத்தில் மின் மாற்றியை மாற்றியமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் மனு

குமாரபாளையத்தில் மின் மாற்றியை மாற்றியமைக்க கோரி  மக்கள் நீதி மய்யம் மனு
X

குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள மின் மாற்றிகளை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது

குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள மின் மாற்றிகளை இடமாற்றம் செய்யக்கோரி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள மின் மாற்றிகளை இடமாற்றம் செய்யக்கோரி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் சாலை, பஸ் நிலையம் செல்லும் சாலை எதிரில் உள்ள மதீனா ஸ்டோர் அருகில் குறுகிய சாலையில் மின்மாற்றி உள்ளது. சுமார் 10 முதல் 12 அடி வரைதான் சாலை உள்ளது. இதில்தான் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த இடம் மிகவும் குறுகியதாக உள்ளதால், பயணிகள் சாலையை கடக்கும் போதும், பேருந்து மற்றும் வண்டிகள் வரும் போது ஒதுங்க கூட இடமில்லாத நிலை இருந்து வருகிறது. இவ்விடத்தில் பல விபத்துகளும் ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களும் உண்டு.

இதேபோல் ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள மின்மாற்றியும் இதே நிலையில் உள்ளது. இவ்விரு இடங்களில் உள்ள மின்மாற்றியை இடமாற்றம் செய்து, பயணிகளின் போக்குவரத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடக்கோரி மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில், மகளிரணி அமைப்பாளர் சித்ரா ஏற்பாட்டில், பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ராஜேந்திரனிடம் மனு கொடுக்கப்பட்டது. நிர்வாகிகள் மல்லிகா, விஜயகுமார், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இது மனித உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதில் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து மின் மாற்றிகளை வேறு இடத்திற்கு மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குமாரபாளையம் பகுதி மக்களின் பிரதான கோரிக்கை ஆக உள்ளது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!