சாலையின் நடுவில் உள்ள டிவைடர்கள் முகப்பில் ஒளிரும் விளக்குகள் அமைக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் டிவைடர்கள் முகப்பில் ஒளிரும்விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
குமாரபாளையத்தில் டிவைடர்கள் முகப்பில் ஒளிரும் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துகளை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டிவைடர்களால் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்கலாம்.சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும் எனவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும்.நடந்து செல்பவர்கள் சாலையை கடக்கும்போது நேராக கடக்க வேண்டும்.பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும். இரவு நேரங்களில் ஒளியை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்து செல்லும் பொழுது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
சாலை விதிகளை மீறக்கூடாதென போக்குவரத்து போலீஸார் அறிவுரை...சிறு குழந்தைகள் நடைபாதைகளில் தனியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பெற்றோர்கள் நடைப்பாதையில் குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது, சாலையில் செல்லும் வாகனத்திற்கும் குழந்தைகளுக்கும் நடுவில் செல்ல வேண்டும்.
நடைபாதைகள் பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டது. அதனை பாதசாரிகள் பயன்படுத்த வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் சாலையின் இடது புறத்தில் பாதசாரிகள் செல்ல வேண்டும்.ஆபத்துக் காலத்தை தவிர பிறசமயங்களில் வாகனங்கள் பயன்படுத்தும் சாலையில் பாதசாரிகள் செல்லக்கூடாது.மரணம் விளைவிக்கக்கூடிய செயல் என்பதால் சாலை நடுவே செல்லக்கூடாது.
சாலையில் செல்லும் பொழுது செய்தித்தாள்களை படித்துக் கொண்டோ விளம்பரங்களை பார்த்துக்கொண்டோ செல்லக்கூடாது.சாலையை கடக்கும்பொழுது நண்பர்கள் எதிர்பாராமல் பார்த்தவுடன் நலம் விசாரிக்ககூடாது. நடைபாதைக்கு சென்ற பிறகு உங்களின் நல விசாரிப்புகளை தொடரலாம்.பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும். பேருந்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சாலை நடுவே செல்ல கூடாது.
சாலை தடுப்புகள் உள்ள சாலையில், கடப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாலையை கடந்து செல்லுங்கள்.ஓடும் பேருந்தை துரத்திக் கொண்டு ஓடக்கூடாது. விபத்தில்லா நீண்டகால வாழ்க்கைக்கு சாலை விதிகளை கடைபிடி யுங்கள்.ஓடும் வாகனத்திலிருந்து இறங்கவோ, ஏறவோ கூடாது.குடிபோதையில் சாலையில் நடந்து செல்லக்கூடாது. இரவு நேரத்தில் கறுப்பான, மங்கலான ஆடைகள் அணிந்து சாலையில் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது பிரதிபலிக்கும் வண்ணமுடைய உடைகளோ அல்லது காலணிகளோ அணிந்து செல்லுதல் வேண்டும் சாலையை கடப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கறுப்பு வெள்ளை வர்ணமிடப்பட்ட சாலையை கடக்குமிடத்தில் கூட சாலையின் இருபுறமும் வாகனம் ஏதும் வருகிறதா என கவனித்து செல்ல வேண்டும்.
நடந்து செல்பவர்கள் சிக்னல் விளக்கு பொறுத்திய சாலையை கடக்கும்போது சிகப்பு விளக்கு எரிந்தால் நிற்கவும். மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இருக்கவும். பச்சை விளக்கு எரிந்தபின் சாலையை கடக்கவும்.பிரதான சாலைகளில் சாலையை கடக்க சுரங்க பாதை அமைத்து இருந்தால், அந்த சாலையை நடந்து செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நெரிசலான சாலையின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ அதிக நேரம் நின்று வேடிக்கை பார்த்தல், வெட்டிப்பேச்சில் ஈடுபடுதல் ஆகியவற்றை தவிர்க்கவும். இதனால் மற்ற போக்குவரத்து பாதிக்கிறது என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu