குமாரபாளையம் வருகை தந்த குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி குமாரபாளையம் வந்தது.
தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கடந்த ஜன.26ல் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஊர்திகளில் ஒன்று இன்று குமாரபாளையம் அருகே சேலம்- கோவை புறவழிச்சாலை வழியாக வந்தது.
குமாரபாளையம் கவுரி தியேட்டர் பின்புற பகுதிக்கு வந்த இதனைக் கண்டதும் பொதுமக்கள் புறவழிச்சாலையில் திரண்டு போட்டோ எடுக்க தொடங்கினர். இதனால் சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
ராஜாஜி, காமராஜ், முத்துஇராமலிங்க தேவர், காய்தே மில்லத், செல்லதுரை குமரப்பா, இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.ஐய்யர், கக்கன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, பெரியார், திருப்பூர் குமரன் உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகள் இந்த ஊர்தியில் வடிவமைக்கபட்டிருந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu