குமாரபாளையத்தில் நாளை சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை

குமாரபாளையத்தில் நாளை சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் நாளை சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குமாரபாளையத்தில் நாளை (ஏப். 13ம் தேதி) நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில்,குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரபாளையம், பவானி சாலையில், கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை, போக்குவரத்து சீராகவும், விபத்தினை தடுக்கும் பொருட்டும், சாலைகளின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர ஆக்கிரமிப்புகள், பழைய இரு சக்கர வாகன கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பாக போட்டு வைத்துள்ள சாய்வு தளம், படிக்கட்டுக்கள் அனைத்தையும் தாங்களாக அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருப்பி வழங்கப்படமாட்டாது. இதனால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்காது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil