குமாரபாளையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தாருக்கு நிவாரண உதவி

குமாரபாளையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தாருக்கு    நிவாரண உதவி

குமாரபாளையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தாருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தாருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நேற்று மாலை 03:00 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வ.உ.சி. நகர், வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஒட்டன்கோவில் உள்ளிட்ட இடங்களில் 7 மின் கம்பங்கள் உடைந்ததாலும், கோட்டைமேடு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல இடங்களில், உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது மரங்கள் விழுந்ததில் இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வ.உ.சி. நகர், சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சூரியகிரி மலை, ஒட்டன்கோவில், கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர்.

ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலைகளில் பல இடங்களில் பல தென்னை மரங்கள் உள்ளிட்ட பல மரங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7 இடங்களில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டதாக மின் வாரிய அதிகாரிகள் கூறினர். இந்த 7 குடும்பத்தாருக்கு மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, நிவாரண உதவிகளை தாசில்தார் சண்முகவேல், வி.ஏ.ஓ.க்கள் முருகன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வழங்கினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story