புதிய வாரச்சந்தைகளை முறைப்படுத்த ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை

புதிய வாரச்சந்தைகளை முறைப்படுத்த ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை
X

கோட்டைமேடு ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன்

குமாரபாளையம் அருகே புதிய வாரச்சந்தைகளை முறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குமாரபாளையம் அருகே புதிய வாரச்சந்தைகளை முறைப்படுத்த வேண்டும் என கோட்டைமேடு ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சந்தை செவ்வாய்க்கிழமையிலும், கல்லங்காட்டுவலசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த இரண்டு சந்தைகளும் ஒன்றிய அலுவலகத்தில் அனுமதி பெறமால் செயல்பட்டு வருகிறது. சந்தை வியாபாரம் முடிந்ததும், காய்கறி கழிவுகளை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்தந்த பகுதி மக்கள் இந்த சந்தைகளை திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த இரு சந்தைகளையும் முறைப்படுத்தி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!