ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கம்

ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கம்
X

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டன.

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டன.

ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசார பணிகளையும், அரசு அதிகாரிகள் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக, ஓட்டுப்பதிவு மெசின்களில் அரசியல் கட்சியினர் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் துவங்கியது. தாசில்தார் சண்முகவேல், உள்பட பலர் இதற்கான பணிகளை கண்காணித்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். குமாரபாளையம் நகராட்சியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் முருகன், ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், வட்டாட்சியர் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்று, வீடு வீடாக சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்

இந்த விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. குறைவான ஓட்டுப்பதிவு நடத்த பகுதிகளில் நடந்த இந்த பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. வழி நெடுக 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தவாறு சென்றனர். வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!