குமாரபாளையத்தில் மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டி: 670 பேர் பங்கேற்பு
குமாரபாளையத்தில் மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றன.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்கள், அமெரிக்காவை சேர்ந்த வள்ளலாரின் விவேகம்பொதுநல அமைப்பு, சித்தா வேதா மையம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை, நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மையம், குமாரபாளையம் ஜெனித் பயிற்சி நிறுவனம் சார்பில் மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். ஜெனித் பயிற்சி நிறுவன இயக்குனர் சுபாஷிணி தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் மதிவாணன், வள்ளலாரின் விவேகம் அமைப்பின் தலைவர் ஸ்ரீ வித்யா போட்டிகளை துவக்கி வைத்தனர். இந்த போட்டிகளில் திருப்பூர், சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, அந்தியூர், நாமக்கல், சேலம், கரூர், குமாரபாளையம், பவானி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 670 போட்டியாளர்கள் பல்வேறு வயது பிரிவின் கீழ் பங்கேற்றனர்.
இதில் ஸ்ரீவித்யா பேசியதாவது:
உலகின் மிக மூத்த கலாச்சாரம் தமிழர்களுடையது. வீரமும், காதலும் தமிழரோடு பின்னி பிணைந்த ஒன்றாகும். பல்வேறு நாடுகளில் வாழுகிற புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலககெங்கும் கொண்டு செல்ல உறுதியேற்க வேண்டும். அந்த வகையில் தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெறும் இந்த சிலம்பு போட்டிகள் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என தெரிவித்தார்.
குண்டடம் திருநந்தி சித்தர் திருக்கோவில் நிறுவனர் செல்வகுமார் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாகிகள் மஞ்சுளா, சங்கரராமன், ராமசாமி, காமராஜ், பாலமோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu