குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த   விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் காவல் நிலையம், குமாரபாளையம் தாலுக்கா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆகியோர் இணைந்து , சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியானது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடியசைத்து துவக்கி வைத்தார்.வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் காவல் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆகியோர் இணைந்து இதனை நடத்தினர்.

இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:-

டூவீலர்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. சிறிய வயதில் உள்ள சிறுவர்களுக்கு டூவீலர்கள் கொடுத்து, அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story