குமாரபாளையம்: டிவைடரில் ஒளிரும் தகடு பொருத்தும் பணி துவக்கம்

குமாரபாளையம்: டிவைடரில் ஒளிரும் தகடு பொருத்தும் பணி துவக்கம்
X

குமாரபாளையம், பவர் ஹவுஸ் பகுதியில் டிவைடரில் ஒளிரும் தகடு பொருத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் பகுதியில், நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் ஒளிரும் தகடு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமாரபாளையம், சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல், ராஜம் தியேட்டர் வரை ஏற்கனவே டிவைடர் நிறுவி போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ராஜம் தியேட்டர் பகுதியில் இருந்து சேலம் -கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு வரை, டிவைடர் வைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் நிறைவு பெற்று, டிவைடருக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கும் பணியும் நிறைவு பெற்றது. ஒவ்வொரு காலி இடத்தையடுத்த புதிய டிவைடரில் பக்கவாட்டில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாததால், இரவில் வேகமாக வரும் வாகனங்கள் இந்த டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

உயிரிழப்பு ஏற்படும் முன், இந்த டிவைடர்களின் மேல் பகுதி, பக்கவாட்டு பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஒளிரும் தகடு பொருத்தும் பணி என்று துவக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!