சுகாதாரப் பணிகளில் உதவி செய்ய தயார்: நகராட்சி சேர்மனிடம் மருந்து வணிகர்கள் உறுதி

சுகாதாரப் பணிகளில் உதவி செய்ய தயார்: நகராட்சி சேர்மனிடம் மருந்து வணிகர்கள் உறுதி
X

குமாரபாளையம் தாலுக்கா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

குமாரபாளையம் சுகாதார பணிகளில் உதவி செய்ய மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தயாராக உள்ளதாக நகராட்சி சேர்மனிடம் உறுதி கூறினர்.

குமாரபாளையம் தாலுக்கா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், சங்க தலைவர் சேகர் தலைமையில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் வார்டு வாரியாக பொது சிகிச்சை முகாம் நடத்தினால் சுகாதாரப் பணிகளில் உதவிட தயாராக உள்ளோம் என மருந்து வணிகர்கள் சங்கத்தினர் உறுதி கூறினர்.

இந்த சந்திப்பில் சங்க செயலர் செந்தில், பொருளர் மெய்வேல், துணை தலைவர் நாகராஜன், குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!