குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார் ஆர்.டி.ஓ.

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார் ஆர்.டி.ஓ.
X

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆர்.டி.ஓ. இளவரசி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு மையங்களுக்கு செல்லாத காவிரி கரையோரப்பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது தாசில்தார் தமிழரசி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். போலீசார், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business