குமாரபாளையத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள் குறித்து ஆர்.டி.ஒ., விசாரணை

குமாரபாளையத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள்  குறித்து ஆர்.டி.ஒ., விசாரணை
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள் குறித்து விசாரணை செய்த ஆர்.டி.ஒ. இளவரசி.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு மனுக்கள் குறித்து ஆர்.டி.ஒ. விசாரணை நடத்தினார்.

இது குறித்து தாசில்தார் தமிழரசி கூறுகையில், பிறப்பு, இறப்பு பதிவுகளை உரிய காலத்தில் செய்யாதவர்கள் தற்போது மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஒ.) இளவரசி குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.

இந்த மனு செய்த 52 பேரிடமும் கவுன்சிலர்கள், வாரிசு ஆகியோரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்தினார். இதன் பின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இதில் துணை தாசில்தார் காரல் மார்க்ஸ், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!