பட்டுப்போன மரத்தை வெட்ட ஆர்.டி.ஓ. பரிந்துரை..!
குமாரபாளையத்தில் பட்டுப்போன மரத்தை வெட்ட ஆர்.டி.ஓ. சுகந்தி நேரில் ஆய்வு செய்தார்.
குமாரபாளையத்தில் பட்டுப்போன மரத்தை வெட்ட ஆர்.டி.ஓ. பரிந்துரை செய்தார்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பழைய சார்பதிவாளர் அலுவலகம் முன்பு, பெரிய அளவிலான இரண்டு மரங்கள் பட்டுப்போன நிலையில் உள்ளது. விபத்து அபாயம் கருதி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி செயலர் சித்ரா ஆகியோர் ஆர்.டி.ஓ. விற்கு புகார் மனு கொடுத்தனர். இதனைக் கண்ட திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி நேரில் ஆய்வு செய்து, பட்டுபோன மரத்தை வெட்ட பரிந்துரை செய்தார். ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. செந்தில்குமார், மக்கள் நீதி மைய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
மக்கள் நீதி மய்யம் மனு சார்பில் மனு கொடுக்கப்பட்டது. குமாரபாளையத்தில் மின்மாற்றியை மாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் அய்யாத்துரையிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு சேலம் மெயின் ரோடு, முருகன் இரும்புக்கடை பின்புறம் முருகன் கோவில் எதிரில், டிரான்ஸ்பார்மர் சாக்கடைக்குள் பதிந்துள்ளது. பழுதடைந்த டிரான்ஸ்மார்மர் அருகில் வீடுகள் மற்றும் கடைகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காதிருக்க உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu