குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. ஆய்வு

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. ஆய்வு
X

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் வரும் ஜனவரி 27ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று ஆர்.டி.ஒ. இளவரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், நில அளவை தாசில்தார் ஜானகி (தாசில்தார் பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறுகையில், குமாரபாளையத்தில் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி திருச்செங்கோடு ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், கால்நடைத்துறையினர் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினர் என தெரிவித்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்