பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கல்

பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கல்
X
ரேஷன் கடைகளில் மளிகைப்பொருட்கள், ரூ.2000-க்கான டோக்கன், பள்ளிபாளையம் பகுதியில் இன்றுமுதல், நான்கு நாட்களுக்கு வீடுவீடாக வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும், 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் கொரோனா கால சிறப்பு நிவாரண தொகையாக, ரூ.2000, தொகைக்கான டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள து.
அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு டோக்கன்கள் வீடுவீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குக்கும் பொருட்டும், கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!