ரேசன் அரிசி கடத்தல்: குமாரபாளையத்தில் 4 பேர் கைது

ரேசன் அரிசி கடத்தல்: குமாரபாளையத்தில் 4 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

குமாரபாளையத்தில், ரேசன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில், அடிக்கடி ரேசன் அரிசி கடத்தபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையத்தில், ரேசன் அரிசி கடத்தி விற்பதற்காக டெம்போவில் ரேஷன் அரிசி எற்றிக்கொண்டிருப்பதை கண்டனர்.

ரேசன் அரிசி மூட்டைகளை டெம்போவில் ஏற்றிய, குமாரபாளையத்தை சேர்ந்த தங்கவேல், 50, பூர்ணசாமி, 23, கோகுல், 18, மணிகண்டன் 20, நான்கு பேரை, போலீசார், கைது செய்தனர். மூன்றரை டன் ரேசன் அரிசி மற்றும் டெம்போ ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிசியையும், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குமாரபாளையம் போலீசார் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!