குமாரபாளையத்தில் ஸ்ரீ ராமநவமி உற்சவ திருவீதி உலா

குமாரபாளையத்தில் ஸ்ரீ ராமநவமி உற்சவ திருவீதி உலா
X

குமாரபாளையத்தில் ராமநவமி உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமன்.

குமாரபாளையத்தில் ஸ்ரீ ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு, சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.

ஸ்ரீ ராமநவமி விழா, ஏப். 10ல் நடைபெற்றது. இதையொட்டி குமாரபாளையம் பகுதி ஸ்ரீ ராமர் கோவிலில் ஏப். 11 முதல் தினமும் உற்சவ பூஜைகள், கட்டளைதாரர் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணர், அனுமன் சுவாமிகளின் திருவீதி உலா, மங்கள வாத்தியத்துடன் குமாரபாளையத்தில் நடந்தது.

கோவிலில் துவங்கிய திருவீதி உலா சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, கிழக்கு காலனி, மேற்கு காலனி, தம்மண்ணன் வீதி, ராஜா வீதி, வேதாந்தபுரம், இடைப்பாடி சாலை உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவு பெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!