குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கல்வி சேவை மையம் திறப்பு விழா

குமாரபாளையத்தில் நடந்த ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கல்வி சேவை மையம் திறப்பு விழாவில் திருநங்கைகளுக்கு சேலைகள் வழங்கப்பட்டன
குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கல்வி சேவை மையம் திறப்பு விழா நடந்தது.
சேலம் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கட்டுப்பாட்டில் குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கல்வி சேவை மையம் திறப்பு விழா நடந்தது. நிர்வாக அலுவலர் பூபாலன் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக பாலாஜி பொதுநல அமைப்பின் தலைவர் சக்திமுருகன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். இதில் திருநங்கைகள் 50 பேருக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர்.
இது பற்றி நிர்வாகி பூபாலன் கூறியதாவது:
இந்த சேவை மையம் சார்பில் ஏழை எளிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி பயில வைக்க சிரமப்படும் போது, அப்படிப்பட்டவர்கள் பற்றி தகவல் அறிந்து, அவர்களுக்கு தேவையான கல்வி உதவி தொகை, கல்வி உபகரணங்கள், சீருடைகள், உள்ளிட்டவைகள் வழங்கி உதவிட உள்ளோம். அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் சேதமானதாக இருந்தால், அவைகளை புனரமைத்து தர உள்ளோம். கல்வி சம்பந்தமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற உள்ளோம். மேலும் ஊர் மக்களுக்கு பயன்படும் வகையில் அத்தியாவசிய உதவிகளும் செய்து தர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பல ஊர்களில் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சார்பில் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். கோவையில் உள்ள ஆஸ்ரமத்தில் சிறுவயது முதலே மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டு, கல்வி பயில செய்து,வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்து வருகிறார்கள். இதில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேறியவர்கள் பல ஆயிரம் பேர், இந்த ஆஸ்ரமத்திற்கு தாமாக முன்வந்து உதவி வருகிறார்கள். சிறு வயதாக இருக்கும் போதே, இறைவனை வழிபட தேவையான இசைக்கருவிகள் இசைக்கவும் கற்றுத்தந்து வருகிறார்கள். பக்தி பாடல்கள் பாடி, இசைக்கருவிகள் வாசிப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைப்பதாக கூறப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu