குமாரபாளையத்தில் ராமதாஸ் பிறந்தநாள் விழா: நகர பா.ம.க.,வினர் கொடியேற்றம்

குமாரபாளையத்தில் ராமதாஸ் பிறந்தநாள் விழா: நகர பா.ம.க.,வினர் கொடியேற்றம்
X

குமாரபாளையம் நகர பா.ம.க. சார்பில் ராமதாஸ் பிறந்தநாள் விழா, கொடியேற்று விழா நடைபெற்றது. (இடம்: ஆனங்கூர் பிரிவு)

குமாரபாளையம் நகரம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பா.ம.க. சார்பில் ராமதாஸ் பிறந்தநாள் விழா, கொடியேற்று விழா நடைபெற்றது.

குமாரபாளையம் நகரம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பா.ம.க. சார்பில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 83வது பிறந்தநாள் விழா, 34ம் ஆண்டு கொடியேற்று விழா மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

அனைத்து பகுதியிலும் மாநில துணை பொது செயலாளர் பொன் ரமேஷ் பங்கேற்று கட்சிக்கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினார். கட்சி தொண்டர்கள் டூவலர்களில் கட்சி கொடியினை கட்டியவாறும், கோஷங்கள் போட்டவாறும் வலம் வந்தனர். நிர்வாகிகள் செந்தில், குமார், பூபதி, பெருமாள், வேல்முருகன், மூர்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!