குமாரபாளையத்தில் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்..!

குமாரபாளையத்தில் ரஜினி பிறந்த நாள்  கொண்டாட்டம்..!
X

குமாரபாளையத்தில் நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவில் முதியோர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

குமாரபாளையத்தில் ரஜினி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள்விழா நகர தலைவர் ரஜினி முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் 10 முதியோர்களுக்கு கண் கண்ணாடிகள், 10 முதியோர்களுக்கு உதவித் தொகை, அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு 10 பாய்கள் ஆகியன வழங்கப்பட்டன. இதில் துணை தலைவர்கள் நாகராஜன், இளவசரன், ஜெயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆதரவற்றோர் மையங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ரஜினி நடத்துனராக வாழ்வைத் தொடங்கி, அயராது பாடுபட்டு படிப்படியாக முன்னேறி புகழின் உச்சியை அடைந்தார். இவரை ரோல் மாடலாக வைத்துக்கொண்டு இன்றைய இளைஞர்கள், தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என முடிவு செய்து, அந்த இலக்கை அடைய பெரு முயற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். ரஜினியை போல் இல்லாதவர்களுக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும்.

சிவாஜி ராவ் கெயிக்வாட் என்கிரா ரஜினிகாந்த் தமிழ்த் திரைப்படங்களில்சூப்பர் ஸ்டார் எனப்போற்றப்படுபவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகங்களில் நடிக்கத்தொடங்கி பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் ஸ்டார்" என்றும் அழைக்கின்றனர்.

2007 ஆம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் சாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.

ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.

2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது.[4] இந்தியத் திரைப்படத்துறையின் சிறந்த ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!