குமாரபாளையத்தில் ரஜினி பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரசிகர்கள்

குமாரபாளையத்தில் ரஜினி பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரசிகர்கள்
X

குமாரபாளையத்தில், ஆனங்கூர் பிரிவு சாலையில்,  ரஜினி ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்கள்.

குமாரபாளையத்தில் ரஜினி பிறந்தநாள் விழாவை, ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ரஜினியின் பிறந்தநாள் விழா, அனைத்து பகுதியில் நேற்று கொண்டாடினர். அதன்படி, குமாரபாளையம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், நகர தலைவர் ரஜினி முருகேசன் தலைமையில், ரஜினி பிறந்தநாள் விழா நடைபெற்றது. குமாரபாளையம், ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த விழாவில் பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டப்பட்டது. அனைவருக்கும் கேக், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதுபோல, காளியம்மன் கோவில், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை ரஜினி ரசிகர்கள் நடத்தினர். அத்துடன் சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ரஜினி ரசிகர் மன்றத்தின் நகர துணை செயலர்கள் கணேசன், நாகராஜ், ஜெயக்குமார், லயன்ஸ் சங்க நிர்வாகி தனபால், நகர இணை செயலர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!