ராஜகணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ராஜகணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே ராஜ கணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை 09:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story