குமாரபாளையம் சாலையில் தேங்கும் மழைநீர்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைக்கு கோரிக்கை

குமாரபாளையம் சாலையில் தேங்கும் மழைநீர்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைக்கு கோரிக்கை
X

குமாரபாளையம் சாலையில் தேங்கிய மழைநீர்.

குமாரபாளையத்தில் உள்ள சாலையில் மழை நீர் தேங்காதிருக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் நகர செயலர் சரவணன் கூறுகையில், குமாரபாளையத்தில் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை வடிகால் அமைக்கப்பட்டு, நடைமேடை அமைக்கும் பணி பல மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

மழை பெய்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி குளமாக மாறி வருகிறது. அமைக்கப்பட்ட வடிகாலில் மழை நீர் செல்லும் வகையில் துளை இடாததால் மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடைமேடை அமைத்த பகுதிகளில் மழைநீர் வடிகாலில் சேர வழி இல்லாததால் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் செல்லும் வாகனங்களால் அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் இது குறித்து கவனம் செலுத்தி, மழை நீர் சாலையில் தேங்காமல் அனைத்து நீரும் வடிகாலில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Tags

Next Story