ஊருக்குத்தான் உபதேசம்: மழைநீரை தேங்குவதை வேடிக்கை பார்க்கலாமா

ஊருக்குத்தான் உபதேசம்: மழைநீரை தேங்குவதை வேடிக்கை பார்க்கலாமா
X

டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  உள்ளாட்சி அமைப்புகள், கத்தேரி பிரிவு அருகே,  ஏரி போல் விவசாய நிலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரையும் அகற்ற முன்வரலாமே.

குமாரபாளையத்தில், விவசாய நிலத்தில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அருகே, விவசாய நிலத்தில் மழைநீர் , ஏரி போல் நிறைந்துள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு நோய் பரவாமல் இருக்க குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வீடுவீடாக போய், மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுறை கூறி வருகின்றன. அத்துடன், பழைய டயர்கள், உடைந்த பானைகள் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது.

ஆனால், இப்படி ஊருக்கு உபதேசம் செய்து வரும் உள்ளாட்சி நிர்வாகங்கள், கத்தேரி பிரிவில் ஏரி போல் தேங்கிய நீரால் பல தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை உணரவில்லை. எனவே, உடனடியாக, தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil