குமாரபாளையத்தில் சூறைக்காற்றுடன் மழை: முறிந்து விழுந்த மரம் உடனடியாக அகற்றம்
முறிந்து விழுந்த மரத்தை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தும் நகராட்சி ஊழியர்கள்.
குமாரபாளையத்தில் இன்று இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மேற்கு காலனி மாவு அரைக்கும் மிஷின் அருகே இருந்த மரம் முறிந்து ஆம்னி காரின் மீது விழுந்தது.
இதனையடுத்து, உடனடியாக கிராமநிர்வாக அலுவலர் முருகன் மற்றும் உதவியாளர் ரகுநாதனிடம் அலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு மரத்தை அகற்ற உத்தரவிட்டார்.
பின்னர் துரித நடவடிக்கையாக தீயணைப்புத்துறையினரும், நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து முறிந்த மரத்தை அறுக்கும் மிஷன் கொண்டு அப்புறப்படுத்தினா்.
மேலும் வருவாய்த்துறையைச் சேர்ந்த பழனிவேல் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு டிரைவர் மணிவண்ணன், ஏரியா மேஸ்திரி மாதேஸ்வரன் ஆகியோர்கள் துரிதமாக மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூரின்றி சரிசெய்தனர். இதில் ஆம்னி காருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுமார் 2 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றிய குமாரபாளையம் தீயணைப்புதுறை, வருவாய்த்துறை, நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் அப்பகுதி பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu