'குளு குளு' குமாரபாளையம்: சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குளு குளு குமாரபாளையம்:  சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமாரபாளையத்தில் சாரல் மழை பெய்து, இதமான சூழல் நிலவியது. 

கோடை வெயிலுக்கு மத்தியில், குமாரபாளையத்தில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அக்னி நட்சத்திரம் போல் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே அஞ்சும் அளவுக்கு குமாரபாளையம் பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக, சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்கள், தற்போதைய கோடை வெயிலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 04:00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர், குளிர் காற்றுடன் சாரல் மழை பெய்தது. திடீர் மழையால் வெப்பக்காற்று தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture