ஆயுதபூஜை வியாபாரத்தை பாதிக்குமா மழை? குமாரபாளையம் வியாபாரிகள் கவலை

குமாரபாளையம் பகுதியில் பகல் நேரத்தில் பெய்த மழையால், வியாபாரம் மந்தாகி வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

நவராத்திரி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை சாமான் விற்கும் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

குமாரபாளையம் நகரில் ஆங்காங்கே வாழை மரங்கள் கடைகள், பூக்கடைகள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், பொரி கடைகள், என தற்காலிக கடைகள் அதிகம் அமைக்கபட்டுள்ளன. நவ. 4ல் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆகியவற்றில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். தங்கள் வசதிக்கேற்ப சாலையோர துணிக்கடைகளில் துணிமணிகள் வாங்கும் நபர்களும் வாங்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த வியாபாரம் தற்போதுதான் சற்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில், நேற்று மாலை 03:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் அனைத்து வியாபாரிகளும் வியாபாரமில்லாமல் தவிப்புக்கு ஆளாகினர். ஒருவேளை மழை இன்றும் தொடருமானால், ஆயுதபூஜை வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று, வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

Tags

Next Story
ai marketing future