இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.
X

பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.ரயில்வே நுழைவு பாதையில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது படத்தில் காணலாம்.

பள்ளிபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், இன்று நெடுஞ்சாலை ஊழியர்களால் மழை நீர் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் ரயில்வே நுழைவு பாதையில் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும்,தொடர்ச்சியாக மழை நீர் இருக்கும் பட்சத்தில் பாலத்தின் உறுதித்தன்மையை கேள்விக்குறியாகி விடும் எனவும் எனவே இந்த விவகாரத்தில் நெடுஞ்சாலைத் துறையினரும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும் சமூக நல அமைப்புகள் காகித கப்பல் விடும் போராட்டத்தையும் நேற்று நடத்தியது. இதன் விளைவாக இன்று நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களால் மின் மோட்டரால் மழை நீர் முழுமையாக அகற்றப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்டாநியூஸ் இணையதள செய்தி நிறுவனத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்த பொழுது மழை நீர் அகற்றும் என்பது தற்காலிகமான தீர்வுதான் என்றாலும்,அடுத்த முறை மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!