குமாரபாளையத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் ராகுல் காந்தி   பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சிகொடியேற்றி வைக்கப்பட்டு, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் ஆதரவற்றோர் மையங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டு ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. நகர துணை தலைவர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், முன்னாள் நகர தலைவர் மனோகரன், நிர்வாகிகள் கோகுல், மாரிமுத்து, கிருஷ்ணன், உள்பட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், ராஜம் தியேட்டர் முன்பு, கவுரி தியேட்டர் அருகில் உள்ளிட்ட பல இடங்களில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து வருகிறார்கள். ராகுல்காந்தியின் தேசிய அளவிலான நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்த்துள்ளனர்.

Tags

Next Story