குமாரபாளையம் அருகே புருஷோத்தம பெருமாள் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா

குமாரபாளையம் அருகே புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்வரி 24ல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அர்ச்சகர்கள், சுவாமிகளை வழிபடும் முறைகள், கோவிலை எவ்வாறு வைத்திருக்க வேண்டும், எந்தெந்த நாட்கள் எந்தெந்த சுவாமிகளுக்கு உகந்த நாள், என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை கூறினார்கள்.
இது குறித்து பெருமாள் பக்தர்கள் கூறியதாவது:-
திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.
தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடப்பெற்ற 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu