விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு சென்ற நபர் கைது

விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு சென்ற நபர் கைது
X
குமாரபாளையத்தில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

விற்பனைக்காக புகையிலை பொருட்கள்

கொண்டு சென்ற நபர் கைது


குமாரபாளையத்தில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் உள்ளிட்ட போலீசார் , தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று காலை 07:00 மணியளவில், அம்மன் நகர் கிழக்கு வீதியில் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஒரு நபர் டி.வி.எக்சல் வாகனத்தில் மூட்டைகளுடன் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்த போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்திட கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் எடை 20.250 கிலோ மற்றும் மதிப்பு 33,360 ரூபாய் என்பது தெரியவந்தது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளி பிரபு, 27, என்பவர் கைது செய்யப்பட்டார்.

Next Story
ai tools for education