குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்கள் இறுதி பட்டியலை பார்வையிட்ட பாெதுமக்கள்

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்கள் இறுதி  பட்டியலை பார்வையிட்ட பாெதுமக்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு விளம்பர பலகையில் ஒட்டப்பட்ட வேட்பாளர்கள் இறுதி பட்டியலை காணும் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டு வேட்பாளர்கள் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குமாரபாளையத்தில் 33 வார்டு வேட்பாளர்கள் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குமாரபாளையத்தில் நகரமன்ற தேர்தலையொட்டி ஜன. 28 முதல், பிப். 4 வரை 250 மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையில் பல்வேறு குறைபடுகளுக்காக 6 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 244 பேர் களத்தில் இருந்தனர். வேட்புமனு வாபஸ் வகையில் 56 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்ட நிலையில் 188 வேட்பாளர்களுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல் நகராட்சி அலுவலகம் முன்பு விளம்பர பலகையில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்கள், அவரது ஆதரவாளர்கள் சரி பார்த்து கொள்வதுடன், பொதுமக்களும் தங்களது வார்டில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால் இந்த விளம்பர பலகையை காணும் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!