அடிப்படை வசதி கோரி தட்டான்குட்டை ஊராட்சி பொதுமக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி கோரி தட்டான்குட்டை ஊராட்சி பொதுமக்கள் சாலை மறியல்
X

 குமாரபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி தட்டான்குட்டை ஊராட்சி ஆனங்கூர் சாலை, காவடியான்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி தட்டான்குட்டை ஊராட்சி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட காவடியான்காடு, வீ.மேட்டுர், மூப்பனார் நகர், பாலமரத்து முனியப்பன் கோவில், ஒடக்காடு, மேட்டுக்கடை, ஜீவா நகர், சாமுண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான வடிகால், கழிப்பிடம், சாலை வசதி ஆகியவைகள் அமைத்து தரக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த அபகுதி பொதுமக்கள் நேற்று காலை 7:00 மணியளவில் ஆனங்கூர் சாலை, காவடியான்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்செங்கோடு செல்லும் அரசு பஸ், வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனம், வேலைக்கு செல்வோர், குமாரபாளையம் பகுதிக்கு வேலைக்கு வருவோர் என பல தரப்பினரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.ஐ.-க்கள் மலர்விழி, முருகேசன், மோகனசுந்தரம் உள்ளிட்ட போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சாலை மறியல் நீடித்தது.

பள்ளிபாளையம் பி.டி.ஒ. வசம் பேசிய ஊராட்சி உறுப்பினர் கதிரேசன், சமர்ப்பா குமரன் பொதுமக்களிடம் கூறுகையில், பி.டி.ஒ. நேரில் வந்து எந்தெந்த இடத்தில் என்னென்ன தேவையோ அதனை குறிப்பெடுத்து உடனே பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மறியலை தற்காலிகமாக கைவிடுவோம் என கூறினர்.

அதன் பின் மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil