மதுபானக்கடையை மூடக்கோரி பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

மதுபானக்கடையை மூடக்கோரி பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
X

பள்ளிபாளையத்தில், மதுபானக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மதுபான கடையை மூடக் கோரி, பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஜீவா செட் பகுதியில், 5910 எண் கொண்ட புதிதாக அரசு மதுபானக்கடை கடந்த வாரத்தில் திறக்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்புமின்றி பொதுமக்கள் பெண்கள், குடியிருப்பு பகுதியில் மாணவ, மாணவர்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த மதுபானக்கடை திறக்க பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக மூட வேண்டும், பெண்களுக்கு பொதுமக்களுக்கு, பாதுகாப்பு கேட்டு திராவிடர் விடுதலைக் கழகம், லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆதவன் லோக்ஜனசக்தி இளைஞரணி மாநில துணைத்தலைவர் ஆதவன் தலைமை தாங்கினார். இவர்களுடன் சரவணன், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர், முத்துப்பாண்டி மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் முருகேசன், மாவட்ட தலைவர் லோக்ஜனசக்தி கட்சி , மாணிக்கம் புரட்சிகர இளைஞர் முன்னணி, வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) புகழேந்தி, இடதுசாரி தொழிற்சங்க மையம் மாணிக்கம், இளைஞரணி லோக் ஜனசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!