குமாரபாளையத்தில் சுற்றித்திரியும் மர்ம கும்பலால் பொதுமக்கள் பீதி
குமாரபாளையத்தில் சுற்றித்திரியும் மர்ம கும்பலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இளைஞர்கள் சிலருடன் தகறாரு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. பொதுமக்கள் தகவல் கொடுத்து போலீசார் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருத்து சென்றது.
நேற்று மாலை 03:00 மணியளவில் அம்மன் நகர் பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். முதல் நாள் நடந்த பிரச்சனை தொடர்பாக அந்த பகுதியில் குடியிருக்கும் ஒரு நபரை தேடி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு 07:00 மணியளவில் இதே போல் குமாரபாளையம் அருகே உள்ள சாமான்டூரில் 100க்கும் மேற்பட்டோர் மோதிக் கொண்டுள்ளன்ர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் படைவீடு பெருமாள் கூறியதாவது:- குமாரபாளையம் அருகே உள்ள சாமான்டூரில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மோதிக்கொண்டனர். கிராம மக்கள் இதனால் அதிர்ச்சியடைந்தார்கள். இதே போல் குமாரபாளையம் பகுதியிலும் நடந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிராமங்கள் மற்றும் குமாரபாளையம் நகரை சுற்றி சுற்றி வந்து கொண்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இளைஞர்கள் வாழ்வை சீரழிக்க கஞ்சா, லாட்டரி சீட்டு, கள்ள மது, மற்றும் போதை வஸ்துக்களை இளைஞர்களுக்கு இது போன்ற மர்ம நபர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களிடையே ஏற்படும் தொழில் போட்டியால் இப்படி பட்ட தகறாறு சம்பவங்கள் நடந்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் இது போன்ற சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை அச்சத்தில் இருந்து மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu