/* */

குமார பாளையம் அருகே கோவில் தகராறில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

குமாரபாளையம் அருகே கோவில் தகராறில் மற்றொரு தரப்பினரை கைது செய்ய வேண்டி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமார பாளையம் அருகே கோவில் தகராறில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்
X

வெப்படை போலீஸ் ஸ்டேஷன் அருகே நான்கு ரோடு பகுதியில் ஒரு சமுதாய நபர்களை கைது செய்ய கோரி, மற்றொரு சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் அருகே கலியனூர் காளியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆடுவது சம்பந்தமாக, இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தாசில்தார் தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினரை சேர்ந்த நபர் ஒருவரை, மற்றொரு தரப்பினரை சேர்ந்த சிலர் தகாத வார்த்தை பேசியதுடன், தாக்கியுள்ளனர். சில நாட்கள் முன்பு இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷன் வந்த போது, வெப்படை போலீசார் இரு தரப்பை சேர்ந்த தலா ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதாக கூறியதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பினரின் சார்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு தரப்பினர் நபர் மீது கைது செய்வதாக கூறிய போலீசார், இரண்டு நாட்கள் ஆகியும் கைது செய்யாததால், வெப்படை போலீஸ் ஸ்டேஷன் முன்பு பொதுமக்கள் குவிந்தனர். இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது என்றும், பகலில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி கூறியதால், அங்கிருந்து கலைந்து சென்றனர். மே. 27 காலை கைது செய்யாவிட்டால் வெப்படை நான்கு ரோடு பகுதியில் சாலை மறியல் செய்வோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன் இன்னும் 2 நாட்களில் கைது செய்வதாக கூறியதால் மறியல் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தலை பட்சமாக செயல்படும் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்யவும் வேண்டி டி.எஸ்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது.

Updated On: 29 May 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!