குமாரபாளையம் அருகே வெட்டப்பட்ட மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் புருஷோத்தம பெருமாள் கோயில் பின்புறம் காலி இடத்தில் இருந்த மரம் வெட்டப்பட்ட நிலையில் அகற்றப்படாமல் உள்ளது.
குமாரபாளையம் அருகே வெட்டப்பட்ட மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் புருஷோத்தம பெருமாள் கோயில் பின்புறம் காலி இடத்தில் இருந்த பெரிய அளவிலான மரம் அனுமதி இல்லாமல் அப்பகுதி சிலரால் வெட்டப்பட்டது. அதனையறிந்த வருவாய்த் துறையினர் நேரில் சென்று மரம் வெட்டிய நபர்களை எச்சரித்து வந்தனர். அதன்பின் மரம் வெட்டிய நபர்களை வி.ஏ.ஒ. மற்றும் ஆர்.ஐ. விசாரணை செய்து, விசாரணை அறிக்கையை தாசில்தார் தமிழரசிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாசில்தாரும் அபராத நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசிக்கு அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டு, வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மரம் வெட்டிய நிலையில் அதே இடத்தில் கிடக்கிறது. அந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் செடி, கோடி, புதர்களில் அடிக்கடி பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்து வருகிறது. மரம் வெட்டிய அதே நாளில் இந்த பகுதியில் தீயணைப்பு படையினரால் பெரிய அளவிலான பாம்பு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். குடியிருப்பு பகுதிகள் அதிகள் உள்ள நிலையில் அடார்ந்த மரம் கீழே விழுந்து கிடப்பதால் விஷ ஜந்துக்கள் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். ஆகவே, வெட்டப்பட்ட மரத்தை பொதுமக்கள் அச்சம் போக்கும் வகையில் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu