ஈரோட்டிற்கு இடைவெளி விட்டு சீராக பேருந்துகள் இயக்க பாெதுமக்கள் கோரிக்கை

ஈரோட்டிற்கு இடைவெளி விட்டு சீராக பேருந்துகள் இயக்க பாெதுமக்கள் கோரிக்கை
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் .

குமாரபாளையம் நகரிலிருந்து ஈரோடு நகருக்கு மாலை நேரத்தில் இடைவெளி விட்டு பஸ்கள் விட கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் நகரிலிருந்து ஈரோடு நகருக்கு மாலை நேரத்தில் இடைவெளி விட்டு பஸ்கள் விட கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு மாநகருக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை அரசு டவுன் பஸ்கள், தனியார் பஸ்கள் எதுவும் இல்லாமல் பயணிகள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 7 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் நான்கு பஸ்கள் வருகின்றன. இவைகள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் நோக்கத்துடன் பஸ் ஸ்டாண்ட் வந்தும், நிற்க கூட நேரமில்லாமல் உடனே சென்று விடுகின்றன. குமாரபாளையத்தில் வேலைக்கு வரும் நபர்கள் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பரிசீலித்து, பஸ்கள் சீராக, இடைவெளி விட்டு, வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
the future with ai