தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்

தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்
X

பொதுமக்கள் வருகையால், இரவிலும் களைகட்டியுள்ள கத்தேரி பிரிவு பூங்கா. 

தொடர் விடுமுறையால், குமாரபாளையம் அருகே பூங்காவில் நீண்ட நாட்களுக்கு பின்னர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பல நாட்களாக தொடர் மழையானது, பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்தது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை இருந்தது. அத்துடன், கொரோனா பரவலாலும், பொதுமக்கள் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். வயனதானவர்கள் மற்றும் குழந்தைகளும் வீட்டில் முடங்கி கிடந்தனர்.

தற்போது மழை இல்லை. அத்துடன், தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள சாலையோர பூங்காவில் அதிகளவில் திரண்டனர். வயனதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் பூங்காவில் பொழுதை போக்கினர். குழந்தைகள் சந்தோஷமாக ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தனர். பூங்காவில் திரண்ட கூட்டம் பற்றி தகவல் பரவ, மேலும் அதிகம் பேர் திரண்டனர். இதனால், பூங்கா களை கட்டியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்