குமாரபாளையத்தில் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு செல்ல பி.டி.ஏ. நிதியுதவி

குமாரபாளையத்தில் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு செல்ல பி.டி.ஏ. நிதியுதவி
X

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு செல்ல பி.டி.ஏ. சார்பில், தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நிதியுதவி வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு செல்ல பி.டி.ஏ. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

குமாரபாளையம் நகரில் சில நாட்கள் முன்பு நடைபெற்ற மாநில யோகா போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ருத்ரன் முதல் இடத்தையும், மவுலிதரன் 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.

இவர்கள் இம்மாத இறுதியில் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். கோவாவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க நிதியுதவி இல்லாமல் கஷ்டப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. ஆகவே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.) சார்பில் நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், மாணவர்களை வாழ்த்தி பேசி, பி.டி.ஏ. சார்பில் வழங்கப்படவிருந்த தொகை 20 ஆயிரத்தை நிர்வாகிகள் பி.டி.ஏ தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் சுப்ரமணியம், அன்பரசு, இளங்கோவன், ராஜ்குமார், கதிரவன் சேகர், சுரேந்தர், விஜயன் ஆகியோருடன் வழங்கினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!