குமாரபாளையம் தாலுகாவில் 31 பேருக்கு கொரோனா இறப்பு நிவாரண நிதி வழங்கல்

பைல் படம்.
குமாரபாளையம் தாலுகாவில் இறப்பு நிவாரண நிதி திட்டம் அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் 31 பேருக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து தாசில்தார் தமிழரசி கூறுகையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் டிச. 3ல் அறிவித்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி குமாரபாளையம் தாலுகாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன் படி இரவு, பகலாக பணியாற்றி இதுவரை 31 நபர்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் வாரிசுகளின் வங்கி கணக்கிற்கு நிதி உதவி அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் இந்த பட்டியல் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர், கொக்காராயன் பேட்டை ஆகிய பகுதிகளில் பட்டா மாறுதல் முகாம்கள் நடைபெற்றது. கொக்காராயன் பேட்டையில் 31 மனுக்களும், காடச்சநல்லூரில் 11 மனுக்களும் ஆக மொத்தம் 42 மனுக்கள் பெறப்பட்டன. துணை வட்டாச்சியர் ரவி மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று நோய் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மனுநீதி முகாம் டிச. 22ல் காடச்சநல்லூரில் நடத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu