அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கல்
X

குமாரபாளையம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அருகே வேமன் காட்டுவலசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அருவங்காடு உயர்நிலைப்பள்ளி அரசு பள்ளியில், ஆறாம் வகுப்ப்பில் நன்றாக படிக்கும் 10 பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆண்டு தோறும் ஸ்கூல் பேக் மற்றும் நோட் புக் மற்றும் கல்வி உபகரணங்களை, அவர்கள் கல்லூரி படிப்பு படிக்கும் வரை, சென்னை சுரபி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் வழங்கி வருகிறார். இதற்கான விழா வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகளுக்கு சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்கூல் பேக் மற்றும் நோட் புக் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இதில் ஆசிரியர் குமார், விடியல் பிரகாஷ், பிரபாகரன், அங்கப்பன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Next Story